திருச்சி தோகமலை மெயின்ரோட்டில் வாழை ஆராய்ச்சிமையம் அருகே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் முசிறியை சேர்ந்த திரவியம் என்பவர் சூப்பர் வைசராக வேலை செய்கிறார்.
முசிறியை சேர்ந்த தமிழரசன், கே.கள்ளக்குடியை சேர்ந்த மணிவேல் ஆகியோர் சேல்ஸ்மேனாகவும், குணசேகரன் என்பவர் உதவி சேல்ஸ்மேனாகவும் பணிபுரிகிறார். கடந்த சனிக்கிழமை திரவியம் விடுமுறை என்பதால் தமிழரசன், மணிவேல், குணசேகரன் ஆகியோர் டாஸ்மார்க் விற்பனையை முடித்து விட்டு கடையை பூட்டி 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை டூவிலரில் வைத்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். தாயனூர் வாழை ஆராய்ச்சி மையத்தை தாண்டி செல்லும் போது முகமூடி கொள்ளையர்கள் 6 பேர் டாஸ்மாக் ஊழியர்கள் சென்ற டூவிலரை மறித்தர்.
அப்போது அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்கள். இது குறித்து சோமரசம் பேட்டை காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் சந்தேகப்படும் படி நபர்கள் இருந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று சொல்லியிருந்தனர். இதையடுத்து 2 பேரை சந்தேகப்படுகிறோம் என்று அடையாளம் காட்டினார். அடையாளம் காட்டப்பட்ட அந்த 2 பேரையும் அழைத்து வந்து போலிஸ் விசாரித்து பிறகு அனுப்பி வைத்தனர். போலிஸ் விசாரணை முடித்து வெளியே சென்ற அந்த நபர்கள் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டியிருக்கிறார்கள்.
இதனால் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் ஊழியர்கள் எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் தயனூர் கடையிலிருந்து வேறு கடைக்கு மாற்ற டாஸ்மாக் மண்டல மேலாளருக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் போலிசார் திடீர் என விசாரணைக்கு டாஸ்மாக் ஊழியர்களை அழைத்தனர். இதில் முதலில் போலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த மணிவேலை விசாரித்துவிட்டு கடைக்கு அனுப்பினார்கள்.
அதன் பிறகு வந்த டாஸ்மாக் ஊழியர்கள் தமிழரசன், குணசேகரன் ஆகியோரை போலிசார் விசாரணைக்கு உட்படுத்தி கடுமையாக தாக்கியிருக்கிறார்கள் இதில் காயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்கா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகார் கொடுத்தவர்கள் மீது போலீஸில் சந்தேகப்பார்வை திரும்பியிருப்பது டாஸ்மாக் ஊழியர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.