நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி நாடுமுழுவதும் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார்.
இன்று தேனி, ராமநாதபுரம் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மதுரை வந்தடைந்த மோடி தனி ஹெலிகாப்டர் மூலம் தேனி கரிசல்பட்டி விலக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்து சேர்ந்தார். அவரை அதிமுக, பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் வரவேற்றனர். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நாளை நமதே நாற்பதும் நமதே என தமிழில் ஆரம்பித்த மோடி
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் மக்களை தவறாக வழிநடத்துகிறது. உங்கள் காவலாளியான நான் உஷாராக உள்ளேன் எதிர்க்கட்சிகள் என்ன திருட்டுத்தனம் செய்து ஏமாற்றினாலும் பிடித்துவிடுவேன். காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது அநீதியும், அநியாயமும்தான். பயங்கர வாதத்தை ஒழிக்க எந்த முயற்சியும் செய்வேன்.
காங்கிரஸ் ஆட்சியில் போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நீதி வழங்குவது. தலித் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கெல்லாம் காங்கிரஸ் நீதி தருமா?. சென்னையிலிருந்து மதுரைக்கு தேஜாஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதில் யாருக்கும் மகிழ்ச்சி இல்லை.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்திய இந்திய ராணுவத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. தமிழகம் எம்ஜிஆர் ,ஜெயலலிதா மண். எங்கள் கூட்டணி இறைவழிபாட்டை மதியக்கூடிய கூட்டணி என கூறினார்.