நடமாடும் பேக்கரி வண்டியில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட 15 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பொய்கை அரசூர் கிராம பகுதியில் உள்ள தெருக்களில் நடமாடும் பேக்கரி வண்டி ஒன்று பன் பேக்கரி, பிஸ்கட், போண்டா போன்ற தின்பண்டங்களை விற்றுள்ளது. இந்த நடமாடும் வண்டியில் இருந்து மேற்படி தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட அந்த ஊரைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு திடீரென வாந்தி பேதி ஏற்பட்டு உள்ளது.
குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக அந்த குழந்தைகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் தெருக்களில் கொண்டு வந்து விற்கும் இதுபோன்ற தின்பண்டங்கள், உணவுப்பொருட்கள் தரமானதா என்று பார்த்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். இதுபோன்று தெருக்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் சம்பந்தமாக உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலுவலர்கள் ஆங்காங்கே ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள் பொதுமக்கள்.