பேராவூரணியில் தினகரன் கொடும்பாவியை எரித்த எம்எல்ஏ!
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான ஆர்.வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கண்டித்து, செவ்வாய்க்கிழமை மாலை பேராவூரணியில் அண்ணாசிலை அருகில், சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமையில் திரண்ட அதிமுகவினர் தினகரனின் கொடும்பாவியை எரித்தும், அவரைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.
இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், ஒன்றியச்செயலாளர் உ.துரைமாணிக்கம், மாநில கயறு வாரிந்த்தலைவர் நாடாகாடு நீலகண்டன்,
நகரச் செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, நகர துணைச்செயலாளர் பால் ஏ.பக்கர், மாவட்ட மாணவரணி ஆர்.பி.ராஜேந்திரன், நிர்வாகிகள் அசோக்குமார், மா.கோ.இளங்கோ, கவியரசன், ரவிசங்கர், சிவ.மதிவாணன், மல்லிகை முத்துராமலிங்கம், கோ.ப.ரவி, அலிவலம் பழனிசாமி, மகளிரணி புஷ்பலதா, ஒட்டங்காடு அடைக்கலம், மு.தங்கராசு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு, "மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகுஆர்.வைத்திலிங்கத்தை கட்சியை விட்டு நீக்க, தினகரனுக்கு அருகதை இல்லை. வைத்திலிங்கம் தலைமையில் தொடர்ந்து இயங்குவோம் என ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் தொகுதிக்கழகம் சார்பில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளோம்" என்றார்.
- இரா.பகத்சிங்