கரூர் மாவட்டம் தமிழகத்தில் லாரிகள் மூலம் மணல் அள்ளிக்கொண்டிருந்த காலம். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து தனிநபர்களும், அரசாங்கமும் மாறி மாறி காவிரி ஆற்றில், அமராவதி ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டி இருந்தார்கள். ஒரு கட்டத்தில் முகிலன் போன்ற செயற்பாட்டார்களின் தொடர் போராட்டத்தினால் நீதிமன்ற உத்தரவினால் கரூர் மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டி மூலமாக காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட சுமார் 5000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் கட்டுமான பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காவிரி மற்றும் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டி மூலமாக மணல் அள்ள உத்திரவிட வேண்டும் என்று நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஜோதிமணியும் அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியும் இணைந்து கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
எதிர்கட்சியாக இருந்தாலும் மணல்வண்டிகாரர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்து அரசியலை ஆரம்பித்து வைத்தது ஆளும் கட்சியினர் இடையே பெரிய பரபரப்பை உண்டாக்கியுள்ளது.