பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள், பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சப்பைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். அதன்படி கடந்த 23ஆம் தேதி 'மீண்டும் மஞ்சப்பை' என்ற இயக்கத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து துணியாலான பை (மஞ்சப்பை) பயன்பாட்டை பரவலாக்க பல்வேறு தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்த வகையில், தற்போது திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் துணிப்பை பயன்பாட்டிற்கான விழுப்புணர்வை முன்னெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளார்.
வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அனைத்து பொருட்களும் மஞ்சள் பையில் வழங்குவதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அதேபோல், திருச்சி கிழக்கு தொகுதி முழுவதும் எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், பொதுமக்கள் அனைவரும் மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரத்தை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.