Skip to main content

மு.க.ஸ்டாலினுடன் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி சந்திப்பு

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
மு.க.ஸ்டாலினுடன் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி சந்திப்பு



திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக தோழமை கட்சிகளின் எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்று சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, 

பேரறிவாளன் பரோல் விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக எங்கள் 3 கட்சிகளின் சார்பாக நன்றி தெரிவிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம். 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த சந்திப்பு எங்களுக்கு மனநிறைவை தருகிறது. 

இன்று உள்ள பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து பேசினோம். அதேபோல 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுள் கைதிகளையும் விடுவிக்க குரல் கொடுக்குமாறு வலியுறுத்தினோம். பாஜக தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும் என துடிக்கிறது. நீண்ட கால திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறது என்றார்.

சார்ந்த செய்திகள்