தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது. முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தப்பட்டது. விரைவாக அது குறித்து முடிவெடுக்கப்படும், செயல்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகின்ற நிலையில், தற்போது இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.