விழுப்புரம் நாப்பாளைய தெருவை சேர்ந்தவர் பிராங்கிளின் திலக், வயது 30. இவர் கடந்த 6 ஆம் தேதி மதியம் ஒன்றரை மணி அளவில் விழுப்புரம் பாண்டி சாலையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர் வைத்திருந்த 3,450 ரூபாய் பணம் மற்றும் அவரது இரண்டு ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை ஹோட்டலில் தவற விட்டுள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் பவ்டா அறக்கட்டளை நிறுவனத்தில் பணிபுரியும் அசோக் மற்றும் அவரது நண்பர் செல்வராஜ் ஆகியோர் அதே ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். அங்கு பிராங்கிளின் தவறவிட்ட பணம், ஏடிஎம் கார்டுகள் கிடந்ததை கண்டெடுத்த அவர்கள், உடனடியாக அதை எடுத்து வந்து மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதையடுத்தது கிராண்ட் பிராங்கிளினிடம் விசாரணை செய்ததில் பிராங்கிளின் தனது மகள் பிலோமினாவுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாட தனது சம்பளத்தில் 3,450 ரூபாய் சேமித்து வைத்திருந்தேன். அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பிறந்த நாள் பரிசு மற்றும் அதற்கான கேக் திண்பண்டங்கள் வாங்குவதற்கு சென்றபோது ஹோட்டலில் தவறவிட்டதாக கூறியுள்ளார்.
அதனையடுத்து பிராங்கிளின் திலக் தவறவிட்ட 3,450 ரூபாய் பணம், அவரது இரண்டு ஏடிஎம் கார்டை மாவட்ட எஸ்.பி. எஸ்.ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். பணத்தை நேர்மையாக கொண்டுவந்து தன்னிடம் ஒப்படைத்த அசோக் மற்றும் செல்வராஜ் இருவருக்கும் எஸ்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.