2013 - 2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேருவதற்குத் தகுதி பெற்ற மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியலைத் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். அதில் அரசின் பொதுவான தரவரிசை பட்டியல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் கல்வி பயின்று அதன் பிறகு நீட் தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்களின் பட்டியல், மற்றும் 3 சிறப்பு பட்டியல் என 3 வகையான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா 569 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தருமபுரியைச் சேர்ந்த பச்சையப்பன் 565 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவன் 560 மதிப்பெண்கள் பெற்றும் 3ஆம் இடம் பிடித்துள்ளார். திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி ரோஜா 544 மதிப்பெண் பெற்று 4 ஆம் இடமும், சிவகங்கையைச் சேர்ந்த மாணவி அன்னப்பூரணி 538 மதிப்பெண் பெற்று 5 ஆம் இடமும் பிடித்துள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர 2662 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் இட ஒதுக்கீடு படி 606 இடங்கள் ஒதுக்கப்பட்டனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் விழுப்புரம் மாணவன் பிரபஞ்சன் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சூர்யா சித்தார்த் 715 மதிப்பென் பெற்று 2 ஆம் இடம், சேலத்தைச் சேர்ந்த வருண் 715 மதிப்பெண் பெற்று 3 ஆம் இடம் பிடித்துள்ளனர். இதையடுத்து மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் 20 ஆம் தேதி தொடங்குகிறது என்றும் அதனைத் தொடர்ந்து தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடக்கவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.