Skip to main content

கலைஞர் விருதை பெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி! 

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Minister I. Periyasamy received the Kalaignar award!
கோப்புப் படம் 

 

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

 

அந்த வகையில் திமுகவின் முப்பெரும் விழா செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெற்று வருகிறது.

 

இதில், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்