திட்டக்குடி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான சி.வி. கணேசன் நேற்று திட்டக்குடி தொகுதியில் உள்ள தொழுதூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டார். அப்போது பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 99 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்கினார். அதில் 149 பேருக்கு வீட்டு மனை பட்டா, 448 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்ட ஆவணங்கள் 188 நபர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள், 40 பேருக்கு வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பிலும், சுகாதாரத்தை சார்பிலும் நிவாரண உதவிகள் என 1066 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் கற்பகம், மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீ கிருஷ்ணன், விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனி, திட்டக்குடி சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியர் ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுருநாதன், முருகன், மங்களூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுகுணா சங்கர், தொழுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன், திட்டக்குடி நகராட்சித் துணைத்தலைவர் பரமகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த அரசு நிகழ்ச்சியின் போது பொதுமக்கள் மற்றும் ஊடகத்தினர் கலந்து கொள்வதற்கு இடையூறாக அமைச்சரை சுற்றி கட்சியினர் நின்றிருந்தனர்.