சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலிருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளுக்குப் பஸ்கள் இயக்கப்பட்டுவந்தது. ஆனால் அதில் சில வழித்தடங்களில் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இல்லாததால் குறிப்பிட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால் புறநகர் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில், மீண்டும் அந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
தொடர்ந்து இதுகுறித்து மக்களிடமிருந்து அமைச்சர்களுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. இதனைக் கருத்தில்கொண்டு சென்னையில் இன்று (12.08.2021) 30 பஸ் போக்குவரத்து புதிதாக தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும், சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 23 பஸ் சேவையும், வட சென்னையிலிருந்து 7 பஸ் சேவையும் அமைச்சர் ராஜகண்ணப்பன் துவங்கிவைத்தார். சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டு புதிய பஸ் போக்குவரத்தைத் தொடங்கிவைத்தனர்.