Skip to main content

மிக்ஜாம் புயல் பாதிப்பு; பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Mikjam storm damage Public Health Department Important Notice

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழை பாதித்த இடங்களில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, பல இடங்களில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்லத் திரும்பி வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்கள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு தவறவிட்ட மற்றும் சேதமடைந்த பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை https://crstn.org என்ற இணையதளம் வாயிலாகக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனப் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கடந்த ஜனவரி 2018 முதல் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்