Skip to main content

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு; வட மாநிலத்தவரால் கதிகலங்கும் மக்கள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

Migrant workers from various parts of North India come to Tamil Nadu

 

பொருளாதாரத்தில் கஷ்டப்படும் வடமாநிலத்தவர்கள் பெரும்பாலும் வேலைக்காகத் தமிழகத்தை நோக்கியே படையெடுத்து வருகின்றனர். பானிபூரி விற்பவர்கள் முதல் ஃபாஸ்ட் புட் கடையில் வேலை செய்பவர்கள் வரை அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் இருக்கின்றனர். குறிப்பாகக்  கோவை, திருப்பூர் பகுதிகளில் வட இந்தியர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.

 

அங்குள்ள பனியன் கம்பெனிகள், தொழிற்சாலைகளில் இவர்கள்தான் அதிகம் பணியாற்றி வருகின்றனர். குறைந்த சம்பளத்தில் நிறைய நேரம் வேலை செய்வதால் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைத்து வட இந்தியர்களையே அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் சேர்த்து வருகின்றனர் கம்பெனி முதலாளிகள். இதனால் அவர்கள் அதிகளவில்  தமிழகத்துக்குப் புலம்பெயர்கின்றனர். அதில் சில வட இந்தியர்கள் கூட்டாகச் சேர்த்துகொண்டு கொள்ளைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான வட இந்தியர்கள் வந்திறங்கியுள்ளனர். இதனை ரயில்வே நிலையத்திலிருந்த ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். அவர்கள் கட்டிட வேலைக்கு வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் பணிக்கு வந்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால், தற்போது இந்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்