Published on 01/04/2018 | Edited on 01/04/2018
![pesent nagar](http://image.nakkheeran.in/cdn/farfuture/DbKMZYvtR_hSQrvtxxtgh8vUzdyvlxP0RWiKDITPZSU/1533347668/sites/default/files/inline-images/pesant%20nagar.jpg)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாலையில் ஏராளமான இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை மாலை 5 மணியளவில் போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி, பின்னர் விடுவித்தனர். இதையடுத்து போராட்டம் பரவாமல் தடுப்பதற்காக மெரினாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் எதிரொலியாக நள்ளிரவில் பெசன்ட் நகர் கடற்கரையில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் பெசன்ட் நகர் கடற்கரையிலும் போராட்டம் பரவாமல் தடுப்பதற்காக மெரினாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.