Published on 19/11/2018 | Edited on 19/11/2018
சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி, சிவாஜி சிலை அகற்றப்பட்டதை மேற்கோள்காட்டி எம்.ஜி.ஆர். வளைவு அமைப்பதற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டது. அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்திற்காக எம்.ஜி.ஆர். வளைவு அமைப்பு என வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே ரூ.2.52 கோடியில் கட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் இதை ஆக்கிரமிப்பாகவே கருத வேண்டும். கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அவற்றை முடித்துக்கொள்ளலாம். ஆனால் நூற்றாண்டு வளைவை திறக்கக்கூடாது. மக்களின் வரிப்பணங்கள் ஏன் இதுபோன்ற திட்டங்களுக்கு வீணடிக்கப்படுகிறது எனவும் நீதிபதிகள் கேள்வி.