கோவையில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு திடீர் சிலை!
கோவையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அண்ணா சிலைக்கு அருகிலேயே திடீரென புதிய சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் இன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகள் பல நாள்களாக நடந்து வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக வ.உ.சி மைதானம் அருகே உள்ள அண்ணா சிலையை செப்பனிடும் பணி நடந்து வந்துள்ளது. அதில் இரும்பு தகரங்களால் மறைத்து சிலை பரமரிப்பு பணிகள் மேற்கொண்டு வந்ததால் பராமரிப்புப் பணிகள் குறித்து வெளிப்படையாக ஏதும் தெரியவில்லை.

இந்நிலையில், இன்று அதிகாலை சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரங்களெல்லாம் அகற்றப்பட்டன. அப்போது அங்கு, அண்ணாவுக்கு அடுத்து எம்.ஜி.ஆர்-க்கும் அதற்கு அடுத்ததாக ஜெயலலிதாவுக்கும் சிலை என மூன்று தலைவர்களுக்கும் வரிசையாக சிலை அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து திடீரென எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலை நிறுவப்பட்டதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.