Published on 10/07/2021 | Edited on 10/07/2021
டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றுவரை (09.07.2021) மேட்டூர் அணையில் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கனஅடி என இருந்த நிலையில், தற்போது நீர்திறப்பு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், நாள் ஒன்றுக்கு அணையின் நீர்மட்டம் ஒரு அடி அளவிற்கு குறைந்துவந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீர் இருப்பு 36.97 டிஎம்சி ஆக குறைந்ததால் நீர் திறப்பு என்பது தற்போது 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்துவருவதால் பாசன தேவை என்பது குறைந்துவருகிறது இதன் காரணமாகவும் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.