சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினரின் மாநாட்டில் நிறைவுரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "விளிம்பு நிலை மனிதர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய மாவட்ட ஆட்சியர்கள் முன்னுரிமை தர வேண்டும். மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக்க மாவட்ட ஆட்சியர்கள் முழு வீச்சில் செயல்பட வேண்டும். பேரிடர் காலத்தின் போது முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக் கடன் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு திட்டங்களையும் நுணுக்கமாகக் கண்காணித்து செயல்படுத்தும் போது மாநிலமும் மேம்படும். குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாடுகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா மாறுதல், சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.