Published on 26/07/2021 | Edited on 26/07/2021
கைத்தறி மற்றும் நெசவாளர்களை ஊக்கப்படுத்த இனி நாங்க கைத்தறி ஆடைகளை மட்டுமே அணிவோம் என மருத்துவத்துறை பணியாளர்கள் தெரிவித்தனர். மேலும் "கதர் ஆடைகளைத் தொடர்ந்து அணிய முயற்சி செய்வோம்" என திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவத்துறையில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் கதர் ஆடைகளை அணிந்து இன்று (26.07.2021) பணிக்கு வந்துள்ளனர். கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் வாரம் இரண்டு நாள் அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கதர் ஆடைகளை அணிய வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.