வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. மதியம் 12 மணியளவில் தமிழகத்திற்கு 820 கிலோமீட்டர் தொலைவில் இருந்த புயல் 8 மணியளவில் 720 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்த புயல் வரும் 15ம் தேதி பாம்பனுக்கும் நாகைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 14-ஆம் தேதி இரவு முதல் 15ஆம் தேதி வரை ஏழு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களுக்கு எட்டு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. நாகை மாவட்டத்திற்கு மூன்று குழுக்களும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு இரண்டு குழுக்களும் விரைந்துள்ளன. அதேபோல் சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தலா ஒரு குழு விரைந்துள்ளது, காஜா புயல் குறித்து கட்டுப்பாட்டு அறை மூலம் 24 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்கவும் தீவிரம் கட்டப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.