Skip to main content

தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு

Published on 26/09/2017 | Edited on 26/09/2017
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் 
மருத்துவக்கல்லூரி செயலிழப்பு பொதுமக்கள் கடும் அவதி



சிதம்பரம், செப்.25- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் இணைக்கவேண்டும். மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக்கட்டணத்தையை இந்த கல்லூரியிலும் வசூலிக்க வேண்டும், ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பொதுமக்களிடம் வசூலிக்கும் அனைத்து வகையான கட்டணங்களையும் ரத்து செய்யவேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆக30 ஆம் தேதியில் இருந்து திங்கள் வரை 27 நாட்கள் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் போராட்டத்தை நிர்வாகம் சட்டவிரோதமானது என்று பேச்சு வார்த்தைகூட நடத்தவில்லை. மேலும் மாணவர்களின் போராட்டத்தை அரசு ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மாணவர்கள் அவர்களின் போராட்டத்தை பகல் இரவு பாராமல் தொடர் உண்ணா நிலை போராட்டமாக கடந்த 4 நாட்களாக நடத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவர்கள் சங்கங்கள் போராட்ட களத்தில் மாணவர்களை சந்தித்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.

இது குறித்து அரசு மருத்துவர் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமிநாதன் கூறுகையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 26ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர்கள், மருத்துவர்கள் கருப்புக்கொடி அணிந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் புறநோயளிகளை புறகனித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்த நிலையில் மாணவர்கள் பெற்றோர்களுடன் கோரிக்கைகளை வலியுறுத்தி 27ஆம் தேதி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்வோம் என்று அறிவித்துள்ளனர். இதனால் பல்கலைக்கழக வளாககத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையில் காவலர்களை நியமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 27 நாட்கள் மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் ராஜாமுத்தையா மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புற நோயளிகளை உள் நோயாளிகளாக அனுமதிக்கவில்லை. புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. 

இந்த மருத்துவமனையை நம்பி அருகில் உள்ள கிராம மக்கள், பக்கத்தில் உள்ள நாகை மாவட்ட கிராமங்களில் உள்ள ஏழைமக்கள் தினம் தினம் 500க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஏமாந்து செல்கிறார்கள். மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்று நிர்வாகம் வெளிபடையாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் நேரத்தை வீணாக்கமல் நோயாளிகளை மற்ற மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்ல உறுதுணையாக இருக்கும் என்று மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பொதுமக்களும் கூறுகிறார்கள்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்