தமிழகத்தின் 38- வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது.
நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்க கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய சிறப்பு அதிகாரியாக லலிதா ஐ.ஏ.எஸ். மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஐ.பி.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28/12/2020) காலை 09.30 மணிக்கு காணொளி மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தனி மாவட்டம் வேண்டும் என்ற கால் நூற்றாண்டு கால கனவு நனவானதால் மயிலாடுதுறை மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.