Skip to main content

தனி மாவட்ட கோரிக்கை கேட்டு தொடரும் கடையடைப்பு...

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, குத்தாலம், செம்பனார்கோயில், வைத்தீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, பொறையார் ஆகிய ஊர்களில் இன்று 2 வது நாளாக கடையடைப்பு.
 

mayiladuthurai

 

--LINKS CODE------

 

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கை தற்போது போராட்டமாக மாறியிருக்கிறது.

தமிழகத்திலேயே பெரிய மாவட்டங்களுல் ஒன்று நாகை. கொள்ளிடத்தில் துவங்கி கோடியக்கரை வரையில் நீண்டு, திருக்குவளை வரை அகண்டுக்கிடக்கிறது. ஒருங்கினைந்த தஞ்சை மாவட்டமாக இருந்து 1991ம் ஆண்டு நாகை மாவட்டம் உதயமாகும் போது மயிலாடுதுறை உட்கோட்டத்தையும் உள்ளடக்கியே அமைத்தனர். அப்போதே மயிலாடுதுறையை தனிமாவட்டமாக்க வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டு பல கட்ட போராடங்களும் நடந்தது. இன்றுவரை அந்த போராட்டம் ஏதோ ஒருவடிவத்தில், ஏதாவது ஒரு அமைப்புகள் முன்வைத்து போராட்டம் நடத்திக்கோண்டே இருக்கின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசியையும், செங்கல்பட்டையும் தனி மாவட்டமாக மாற்ற இருப்பதாக தமிழக அரசு சட்டசபையில் தெரிவித்தது. அண்மையில் கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவும் அறிவித்திருந்தது. ஆனால், பல வருடங்களாக மயிலாடுதுறை மக்கள் தனி மாவட்ட கோரிக்கை கேட்டு வரும் நிலையில் நேற்று மயிலாடுதுறை முழுவதும் கடையடைப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்றும் கடையடைப்பு தொடர்கிறது. 


 

சார்ந்த செய்திகள்