மாதொருபாகன் நூலுக்கான விருதை ரத்து செய்யக்கோரி
சாகித்திய அகடாமி முன்பு 28ல் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
கொங்குநாடு ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
’’இன்று(26.08.2017) காலை புது டெல்லியில் உள்ள சாகித்திய அகடாமி தலைமை அலுவலகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி(KJK) நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், அகடாமி செயலாளர் கே.சீனிவாசன் ராவ் அவர்களை சந்தித்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலைப் பற்றி அவதூறாக எழுதப்பட்ட”மாதொரு பாகன்”என்ற நூலின் மொழிபெயர்ப்பான “ONE PART WOMAN” என்ற நூலுக்கு வழங்கப்பட உள்ள சாகித்திய அகடாமி விருதை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அவரை சந்தித்து,தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையை எடுத்துரைத்தோம்.
உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஃப்ரோசா சாலையில் உள்ள சாகித்திய அகடாமி அலுவலகத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
கொங்கு இளைஞர் பேரவை குமார ரவிக்குமார்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் மற்றும் கொங்குநாடு ஜனநாயக கட்சி(KJK) நிறுவனத் தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்துகொள்ளும் இப்போராட்டத்தில் டெல்லியில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காத்திட,உங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ’’