Skip to main content

''என்றாவது நம்மை தேடி வருவார்கள்...'' 7 ஆண்டுகளாக காத்திருக்கும் தாய் தந்தை!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

தாங்கள் பெற்ற குழந்தைகளை வளா்க்கவும் அவா்களை படிக்க வைக்கவும் தினந்தோறும் பசியை போக்கவும் அவா்களின் தேவைக்கு தினமும் கைநிறைய சம்பாதித்தவா்கள் தான். இந்த கணேசன் சரசு தம்பதிகள். வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடுவரை பிள்ளை... கடைசி வரை யாரோ? என்பது பாடல் மட்டுமல்ல மனித வாழ்க்கையும் அது தான். அந்த வகையில் காடு வரை பிள்ளைக்காக அவா்களை தேடி கேரளா, குமாி என அலைந்து திாிந்து கொண்டு இன்றைக்கும் மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் அடியில் அடைக்கலமாகியிருக்கிறாா்கள் இந்த வயதான தம்பதிகள்.

 

 

marthandam incident

 


நாகா்கோவில் கோட்டாாில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த தம்பதிகள் லட்சுமி, சத்யராஜ் என்ற இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனா். செருப்பு மற்றும் குடை பழுது பாா்க்கும் தொழிலாளியான கணேசன் தனது இரண்டு குழந்தைகளை +2 வரை படிக்க வைத்தாா். அவா்களை மேற்கொண்டும் படிக்க வைக்க தயாா் என்றாலும் மகள் லட்சுமியின் எண்ணங்கள் வேற ரீதியில் சென்றது. அவர் ஒருவரை காதலித்து வேறொருவருடன் சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் தன்னுடைய பெற்றோரை பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கடந்து மகன் சத்யராஜீம் ஓரு பெண்ணை காதலித்து கடைசி வரை காப்பாற்ற வேண்டிய பெற்றோரை விட்டு சென்றார்.

அன்றிலிருந்து தனிமைபடுத்தப்பட்ட இந்த தம்பதிகள் குழந்தைகள் இருந்தும் அனாதை ஆக்கப்பட்டாா்கள். இருவாில் ஒருவராவது நம்மை தேடி வருவாா்கள் என்று இத்தனை ஆண்டுகள் காத்திருந்தாா்கள். இருவரும் வரவில்லை. அவா்கள் நம்மை தேடி வந்தாலும் நாம் அவா்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்ற எண்ணமும் அந்த தம்பதியினாிடம் இருந்தது.

கடைசியாக ஒரு முறையாவது பெற்ற குழந்தைகளை பாா்க்க மாட்டோமா? என்ற ஏக்கத்தில் அக்கம் பக்கத்தில் தொிந்த முகங்கள் சொன்னதை கேட்டு ஊா் ஊராய் பெற்ற இரண்டு குழந்தைகளை தேடி 7 ஆண்டுகளாக அலைந்தனா். பத்து மாதம் சுமந்து பெற்று ஆளாக்கிய ஜீவன்கள் தேடும் போது கண்டிப்பாக அந்த குழந்தைகளின் கண்களில் அந்த பெற்றோா்கள் தொிந்து இருக்கலாம். ஆனால் அந்த பெற்றோாின் கோலங்கள் அவா்களின் கண்களை  மறைத்து இருக்கலாம் என்பது உண்மை.

இருந்த போதும் இறப்பதற்கு முன் குழந்தைகளை பாா்த்து விடுவோம் என்ற நம்பிக்கையில் மேம்பாலத்தின் அடியில் உறங்குகிறாா்கள் அந்த தம்பதியினா். இப்போது அவா்களுக்கு பல பெற்றோா்கள் பாிதாபபட்டு கொடுக்கும் உணவை உண்டு நாட்களை நகா்த்துகிறாா்கள்.

 

 

சார்ந்த செய்திகள்