Skip to main content

பெண்ணிடம் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களிடம் நடத்திய விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்..!  

Published on 12/08/2021 | Edited on 12/08/2021

 

Many facts revealed in the investigation conducted on the women involved in the theft of jewelry from the woman ..!

 

திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த செல்வசுந்தரி என்ற பெண்ணின் கவனத்தைச் சிதறடித்து அவர் அணிந்திருந்த 3.5 சவரன் நகையை இரண்டு பெண்கள் திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கோட்டை காவல் நிலையத்தில் அப்பெண் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டதோடு சிசிடிவி பதிவுகளின் உதவியோடு அந்த இரண்டு பெண்களையும் தேடிவந்தனர். 

 

இந்நிலையில், அந்த இரண்டு பெண்களும் தனிப்படையினரால் இன்று (12.08.2021) கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுலோசனா (29), ரேகா (33) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், மங்கள் & மங்கள் நகைக்கடையில் 5 சவரன் நகையைத் திருடியதும், அல்லிமால் தெருவில் உள்ள நகைக் கடைகளில் நகை திருடியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுவரை அவர்கள் மொத்தம் 22 சவரன் நகைகளைத் திருடியுள்ளது தெரியவந்தது. சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைத் திருடிய அவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்