Published on 09/10/2020 | Edited on 09/10/2020
கடலூர் மாவட்டம், பண்ருட்டி எல்.என்.புரம் குமரன் நகரைச் சேர்ந்த வர்மங்களம் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் கடந்த 15ஆம் தேதி நகை, பணம் கொள்ளை போனது. இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார்.
தீவிர விசாரணையில் வளவனூரை சேர்ந்த எழில்(எ)எழிலேந்தி என்பவர் திருடியது தெரிய வந்தது. வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார், கஸ்டடி எடுத்து விசாரித்தார். தொடர்ந்து கொள்ளையனிடமிருந்து ஓய்வுபெற்ற தாசில்தார் மங்களம் வீட்டில் திருடிய 21 பவுன் நகையை மீட்டனர்.
துரிதமாக செயல்பட்டு திருட்டுவழக்கில் துப்புதுலக்கி நகைகளை மீட்ட பண்ருட்டி போலீசாருக்கு
கடலூர் எஸ்.பி, பண்ருட்டி டி.எஸ்.பி ஆகியோர் பாராட்டினர்.