Published on 24/03/2019 | Edited on 24/03/2019
அறிவிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் எம்.சிவகுமாருக்கு பதிலாக என்.ஸ்ரீதர் போட்டியிடுவார் என மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் குழுவின் பரிந்துரைப்படி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.