மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்புர் அருகே உள்ள பந்தபுர் என்கிற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 962 தமிழர்கள் ஊரடங்கு உத்தரவால் அங்கேயே தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் அவர்கள் தமிழகம் திரும்ப முடியாத நெருக்கடி ஏற்பட்டது. மத்திய மாநில அரசுகள் ஏற்பாட்டின் பேரின் இன்று சிறப்பு ரயில் மூலம் அனைவரும் திருச்சி அழைத்து வரப்பட்டனர். வந்த அனைவரும் சம்மந்தப்பட்ட ஊர்களுக்கு 30 பேருந்துகளில் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்துள்ளார்.
இந்த 962 பேரில் திருச்சியை சேர்ந்தவர்கள் 29 பேர். இவர்கள் அனைவரும் கள்ளிக்குடியில் உள்ள சிறப்பு கரோனோ கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். 40 நாட்கள் கழித்து மும்பையிலிருந்து திருச்சி வந்து இறங்கிய அனைவரும் விசில் அடித்தும், சத்தம் போட்டும் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.