உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதுக்கோட்டையை சேர்ந்த அக்பர் அலி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’என் மகன் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கிறார். அப்பள்ளியில் முதல்வர் ரேவதி(55) என் வீட்டிற்கு அருகில் உள்ளதால் அவரிடம் டியூஷனுக்கு அனுப்பினேன். அதன்பின்னர், என் மகனுக்கும் ஆசிரியைக்கும் தவறான உறவு இருப்பதாக அருகில் இருந்தவர்கள் கூறிவந்தனர். மகனின் நடத்தையிலும் மாற்றம் தெரிந்தது.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். உடனே, ரேவதி வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் சமூக வலைதளம் மூலமாக என் மகனுடன் தொடர்பில் இருக்கிறார். இதனால் என் மகனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகிறோம். அதனால் ரேவதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியையிடம் இருந்து என் மகனை மீட்டுத்தர வேண்டுகிறேன்’’என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, மறு விசாரணை 26ல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாணவனை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.