தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 33 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3,827 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக, 4 ஆயிரத்தை தாண்டி பதிவான நிலையில், இன்று நான்காயிரத்திற்கும் குறைவாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் மருத்துவமனைகளில் 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் 1,747 பேருக்கு சென்னையில் மட்டும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 70 ஆயிரத்து 71 ஆக மொத்த பாதிப்பு உள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்று 61 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, அரசு மருத்துவமனைகளில் 46 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 15 பேரும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் இதுவரை 489 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தமாக 1,082 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 128 பேரும், திருவள்ளூரில் 100 பேரும் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,571 ஆக அதிகரித்துள்ளது. 37-வது நாளாக உயிரிழப்போர் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் தொடர்ந்து வருகிறது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் மட்டும் 2,080 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், மாவட்டங்களில் ஆயிரத்தை கடந்துள்ளது பாதிப்பு. அதேபோல் தேனி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. மதுரையில் மேலும் 245 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டதால், அங்கு மொத்த எண்ணிக்கை 4,338 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் 213 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவள்ளூரில் 175 பேருக்கும், கோவையில் 60 பேருக்கும், விழுப்புரத்தில் 50 பேருக்கும், சிவகங்கையில் 51 பேருக்கும், வேலூரில் 49 பேருக்கும் ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஒரே நாளில் 109 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 1,271 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகரில் 86 பேருக்கும், நெல்லையில் 84 பேருக்கும், கன்னியாகுமரி 70 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 41 பேருக்கும், திருச்சியில் 40 பேருக்கும், சேலத்தில் 39 பேருக்கும், திருவண்ணாமலையில் 37 பேருக்கும் இன்று ஒரே நாளில் கரோனா செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தமாக 66 ஆயிரத்து 571 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் இன்று ஒரேநாளில் 3,793 பேர் வீடு திரும்பியுள்ளனர்.