இந்தியாவில் மத்தியில் ஊழலுக்கு எதிரான அமைப்பு "லோக்பால்" ஆகும். மாநிலத்தில் ஊழலுக்கு எதிரான அமைப்பு "லோக் ஆயுக்தா" ஆகும். இந்த இரண்டு அமைப்பையும் உருவாக்க வலியுறுத்தி சுதந்திர போராட்ட வீரர் "அன்னா ஹசாரே" 2014 ஆம் ஆண்டு டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதில் சமூக ஆர்வலர்கள் , அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சியில் அமர்ந்தால் "லோக் பால்" அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்தது. இதனை தொடர்ந்து ஆட்சியை பிடித்த பாஜக "லோக் பால்" அமைப்பை உருவாக்க முன்வரவில்லை. இதனால் மீண்டும் தனது உண்ணாவிரதத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் அன்னா ஹசாரே தொடங்கினார்.
அப்போது அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அரசு "லோக்பால்" அமைப்பு கட்டாயம் உருவாக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து தற்போது "லோக்பால்" அமைப்பின் தலைவராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி " பினாகி சந்திர கோஷ்"நியமித்து குடியரசுத்தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் இந்த நாள் சுதந்திர இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க நாள் . இந்த நாளை (19/03/2019) "லோக்பால்" தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
"லோக்பால்" அமைப்பின் சிறப்பம்சங்கள் .
இந்தியாவில் உள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மத்திய அரசு அதிகாரிகள் , பிரதமர் உட்பட யார் ஊழல் செய்திருந்தாலும் அதற்கான ஆவணத்தை "லோக்பால்" அமைப்பிடம் அளித்து சமந்தப்பட்டவர்கள் மீது புகார் மனு அளிக்கலாம். இந்த அமைப்பு சாதாரண மக்கள் ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆளும் யார் மீதும் ஊழல் இருந்தாலும் இந்த அமைப்பை நாடலாம்.
லோக்பால் அமைப்பின் தலைவராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி " பினாகி சந்திர கோஷ் "அவர்களும் 8 உறுப்பினர்களும் உள்ளனர். இந்த உறுப்பினர்களில் நான்கு பேர் நீதிபதிகள் ஆவர். இந்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலை குடியரசுத்தலைவர் மாளிகை தனது செய்தி குறிப்பில் வெளியீட்டுள்ளது.
1. நீதிபதி . திலீப் பி. போசாலே.
2. நீதிபதி . பிரதீப் குமார் மோகன்தி.
3. நீதிபதி . அபிலஷா குமாரி.
4. நீதிபதி . அஜய் குமார் திருப்பதி.
5. திரு. தினேஷ்குமார் ஜெயின்.
6. திருமதி. அர்ச்சனா ராமசுந்தரம்.
7. திரு. மகேந்தர் சிங் .
8. டாக்டர். இந்திரஜீத் பிரசாத் கௌதம்.
உள்ளிட்டோர் "லோக்பால்" அமைப்பின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக எனவும் குடியரசு தலைவர் மாளிகை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. "லோக்பால்" மற்றும் "லோக் ஆயுக்தா" குறித்த கட்டுரை சமீபத்தில் "நக்கீரன்" இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.