Published on 06/10/2021 | Edited on 06/10/2021
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று (06.10.2021) மற்றும் வரும் 9ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. இதில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 07.00 மணிக்கு தொடங்கியது. முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 7,921 மையங்களில் 41,93,996 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், திருவஞ்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில், மக்கள் வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்துவருகின்றனர்.