திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் ஒன்றியம் என்பது முழுக்க முழுக்க மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதி. இந்த ஒன்றியத்தில் மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக, திமுக போன்றவை வேட்பாளர்களை நிறுத்தின. வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் 7 வார்டுகளில் அதிமுக 3 வார்டுகளிலும், திமுக 2 வார்டுகளிலும், தேமுதிக 1 வார்டிலும், சுயேட்சையாக 1 வர் என வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் வார்டு எண் 7ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் அதிமுக காளி சான்றிதழை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு சென்றவர் அப்படியே காணாமல் போனதாக கூறப்படுகிறது. இப்போது வரை அவர் எங்குயிருக்கிறார் என தெரியாததால் ஜமுனாமரத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியாகி அவரை தேடிவருகின்றனர். அவரது செல்போன் சுச் ஆப் நிலையில் உள்ளதால் அவரது உறவினர் வீடுகளில் எல்லாம் தேடிவருகின்றனர். திமுகவினர் கடத்திவிட்டார்கள் என அதிமுக குற்றம் சாட்டுகிறது. நாங்கள் கடத்த வேண்டிய அவசியம்மில்லை என்கிறது திமுக.