கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடந்துவரும் நிலையில், இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு ஆய்வு செய்தார். கீழடி அகழாய்வுப் பதிவேட்டில் வைகோ தம் கைப்பட எழுதிய குறிப்புகள் இவை -
கீழடி அகழாய்வு என்பது ஏறத்தாழ 2600 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த பழந்தமிழர்களின் நாகரீகத்தைப் பிரகடனம் செய்பவை:
ஏறத்தாழ 16000 பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. கலைநுணுக்கத்துடன் பானைகள், அதில் எழுத்துக் குறியீடுகள், நுணுக்கமான கலையழகுடன் செய்யப்பட்ட பொருட்கள், நகர நாகரீகம் எழுத்தறிவுள்ள தமிழர் சமுதாயம் என்பதை நிரூபணம் செய்கின்றன. நீர்க்கால்வாய்கள், நெசவுத்தொழில், உருக்குத் தொழில் அடையாளங்கள் காணப்படுகின்றன. சூதுபவளம் எனும் 1 1/2 .1.5 சென்டி மீட்டர் அகலத்தில் இருப்பது ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள் பிரான எழுத்துக்களின் காலத்துக்கு முற்பட்டவை. கரிம பரிவுகள் அமெரிக்காவில் புளோரிடாவில் பீட்டா ஆய்வுகள் கிமு 580 ஆண்டுகள் காலத்தியது என உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தத்தில் 10 ஏக்கர் அளவிற்குள் ஆய்வு – 110 ஏக்கரும் தொல். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என்ற நிலை வரவேண்டும். பக்கத்திலுள்ள கொந்தகை, மணலூர் அகரம் ஆகிய உள்ளூர் பகுதிகளிலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும். பக்கத்திலுள்ள 90 ஏக்கர் நிலமும் ஆய்வு செய்யப்பட வேண்டும். பழந்தமிழர்கள் வீடுகள் கட்டி வாறுகால்கள் அமைத்து, நெசவும், ஆலை போன்ற தொழிற்கூடங்கள் அமைத்திருந்தனர் என்பது நிரூபணம் ஆகிறது. இதுவரை 16000 பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாகரீகமான வாழ்க்கை, எழுத்தறிவு மேம்பட்ட சமுதாயம் என்பது நிரூபிக்கப்பட்டதால் தொல்லியல் ஆய்வு தமிழத்தின் வைகை ஆற்றுப்படுகைகள், தாமிரபரணி, காவிரி ஆற்றுப் படுகைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில அரசின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு துணையாக வேண்டும். இன்று 11-10-2019-ல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனிவேல் தியாகராஜன், நம் புலவர் செவந்தியப்பன், பூமிநாதன், வீரபாண்டியன் உள்ளிட்ட தோழர்களுடன் வந்தோம். இவ்விடத்தில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள திரு.மு.சேரன், திரு.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் எங்களுக்கு மிகவும் அருமையாக விளக்கம் தந்தனர்.
பழந்தமிழர் நாகரீகத்தின் காலக்குறியீடு கீழடி ஆகும்.
பலரும் சூழ்ந்திருந்த நிலையிலும், கீழடியில் தான் பெற்ற உணர்வினை மனதில் நிறுத்தி, பதிவேட்டில் விரிவாகவே எழுதியிருக்கிறார் வைகோ.