Published on 19/02/2018 | Edited on 19/02/2018

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைக்கும் வழக்கறிஞர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டு நீதிமன்றமே கலவரமானது. போலீசாரின் இந்த தாக்குதலை காண்டித்து ஆண்டு தோறும் வழக்கறிஞர்கள் இந்நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், ஆவின் கேட் வாயிலில் போராட்டம் நடைப்பெற்றது. அச்சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வக்கீல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுப்பட்டனர்.