Skip to main content

ஜெயலலிதா நினைவிடம் ஜன.27ல் திறப்பு!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
hkj

 

ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. 

 

ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் வரும் 27ம் தேதி இந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்