Skip to main content

கொலை வழக்கில் கைதான மூவருக்கு ஒரே நாளில் குண்டாஸ்!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

சேலத்தில் ஆட்டோ கோபால் கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும் போலீசார் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் பெரியபுதூர் சிஎஸ்பி நகரை சேர்ந்தவர் ஆட்டோ கோபால் என்கிற கோபாலகிருஷணன். அவர் கடந்த 14.6.2018ம் தேதியன்று தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 

 

murder case


இந்த சம்பவம் தொடர்பாக பெரிய புதூரை சேர்ந்த உலகநாதன் (24), பூபாலன் (24), முதல் அக்ரஹாரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23) மற்றும் இவர்களின் கூட்டாளிளான அரவிந்த்குமார், விஜய் என்கிற விஜயகுமார், பிரசாந்த் ஆகிய ஆறு போலீசார் கைது செய்தனர்.


முன்விரோதம் காரணமாக இந்த கொலையை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது. கொலை கும்பலிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 


இந்த வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உலகநாதன், பூபாலன், ராஜ்குமார், விஜய் என்கிற விஜயகுமார் ஆகியோர் கடந்த   அக்டோபர் மாதம் பிணையில் வெளியே வந்தனர். 


இந்நிலையில் கடந்த 3.11.2018ம் தேதியன்று, அழகாபுரம் கண்ணகி தெருவை சேர்ந்த மருதாசலம் என்பவரிடம் பிருந்தாவன் சாலையில் கத்தி முனையில் 1450 ரூபாயை அவர்கள் மூவரும் வழிப்பறி செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவர்கள் நால்வரையும் அழகாபுரம் போலீசார் கைது செய்தனர்.


கைதானவர்களில் உலகநாதன், பூபாலன், ராஜ்குமார் ஆகியோர் கொலை, வழிப்பறி மட்டுமின்று மேலும் சில குற்ற வழக்குகளும் உள்ளன. இதையடுத்து, மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் மூன்று பேரும் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களிடம் தடுப்புக்காவல் ஆணை சார்வு செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்