கன்னியாகுமாி பாராளுமன்ற தொகுதி எம்.பி. வசந்தகுமார் (காங்கிரஸ்) கரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தாா். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அவரை கரோனா தொற்று தாக்கி அதிலிருந்து மீண்டு கொண்டிருந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் நேற்று (28-ம் தேதி) மாலை இறந்தாா். அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர், எதிா்கட்சி தலைவர் உட்பட அரசியல் பிரபலங்கள், திரைப்படத் துறையினா், வா்த்தக அதிபா்கள் என பல தரப்பினர் இரங்கல் தொிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குமாி மாவட்டத்தில் வசந்தகுமாரோடு இணைந்து மக்கள் பணியாற்றிய மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ. க்களும் இரங்கல் தொிவித்துள்ளனா். இதில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், “தொகுதியின் வளா்ச்சிக்காக இரவு பகலாக உழைத்தவர். யாா் உதவி கேட்டு சென்றாலும் மனமகிழ்சியுடன் உதவக்கூடியவர். கட்சி பாகுபாடியின்றி எல்லோாிடமும் அன்பாக பழகக்கூடியவர்” என்று கூறியுள்ளார்.
திமுக மனோ தங்கராஜ், “நம்பி வருவோரை வெறும் கையுடன் அனுப்பாத அரசியல் நாகரிகமுடைய ஒரு அரசியல் தலைவரை குமாி மாவட்டமும் தமிழகமும் இழந்து விட்டது” என்றார்.
காங்கிரஸ் ராஜேஷ்குமார், “நேரு குடும்பத்தாராலும், காமராஜராலும் ஈா்க்கபட்டவர். காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்டவர். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோில் சென்று நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர்” என்றுள்ளார்.
காங்கிரஸ் பிரின்ஸ், “குமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டு அந்த பணிகளுக்காக அவா் உழைத்து வந்த நிலையில் நம்மை விட்டு பிாிந்து சென்று விட்டார்” என்றார்.
காங்கிரஸ் விஜயதரணி, “காங்கிரஸின் மிக பொிய தூணாக இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து அவருடைய பணிகளை நினைவு கூரும் நேரத்தில் அவரை இழந்து விட்டோம் என்றார்.
மேலும் கேரளா எதிா்கட்சி தலைவர் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான வசந்தகுமார் என்னிடம் மிகுந்த அன்போடும், நெருக்கமாகவும் இருந்தவா். அவரின் இந்த திடீா் மறைவு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். இதுபோக மேலும் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மேல்சபை எம்பி விஜயகுமாா் ஆகியோரும் இரங்கல் தொிவித்துள்ளனர்.