கூட்டுறவு சங்க தலைவர் - செயலாளர் மோதல்: பொதுமக்கள் கடும் அவதி
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இயங்கி வரும் தொடக்க் வேளாண்மை கூட்டுறவு சங்கம் கடந்த ஒருவாரமாக மூடிகிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுபற்றி புல்லந்தையை சேர்ந்த பாக்கியலெட்சுமியிடம் கூறுகையில், என்னுடைய 10 பவுன் நகை அடகுவைத்து ஓராண்டு ஆகிவிட்டது. வங்கியிலிருந்து உங்கள் நகைகளை ஏலம் விடப்போகிறோம், உடனடியாக திருப்பிகொள்ளுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர், நானும் கடந்த (18.09.2017) திங்கள்கிழமையிலிருந்து இன்றுவரை வருகிறேன், கூட்டுறவு சங்கம் திறக்கவில்லை, நகைகள் பத்திரமாக உள்ளதா என தெரியவில்லை, இதுபற்றி யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை. இதேபோல் இங்குசெயல்பட்டுவரும் இ-சேவை மையத்தில் கடந்த ஒருவாரத்திற்க்கு முன்பாக வசந்தி என்பவர் தன்னுடைய மகனுக்கு ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார், ஆனால் அவருக்கும் இன்றுவரை கிடைக்கவில்லை. தினமும் பூட்டிகிடக்கும் கூட்டுறவு சங்கத்தை பார்த்துவிட்டு செல்கிறார்.
இதுபற்றி கூட்டுறவு சங்க செயலாளர் பொற்செல்வனிடன் விசாரித்தபோது, தலைவர் என்னிடம் தகுதியற்ற நபர்களுக்கு 3.25 கோடி அளவிற்கு கடன் வழங்க சொல்கிறார். ஆனால் அவர்களிடம் வசூலிப்பது மிகவும் சிரமம். இதனால் எனக்கும் தலைவருக்கும் கருத்து வேறுபாடு நிலவிவந்தது. அதிகாரிகள் சொல்வதை தான் நான் கேட்கமுடியும், இதனால் தான் கூட்டுறவு சங்கம் திறக்காமல் உள்ளது. இதுபற்றி மேலதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளேன். நகைகள் அனைத்து பத்திரமாக உள்ளது பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை.
இதுபற்றி கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் உள்ளன. சங்கத்தில் நிறைய தில்லுமுல்லு செய்துள்ளார், இதுபற்றி நாங்கள் கேட்டால் எங்களை பற்றி புகார் அளித்துள்ளார். நாங்கள் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எங்களை எப்போது அழைத்தாலும் நாங்கள் விசாரணைக்கு வர தயராக உள்ளோம் என்றார்.
பொதுமக்களின் நகை பத்திரமாக உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று நகை அடமானம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
பாலாஜி.