Published on 24/12/2022 | Edited on 24/12/2022

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதனைத் தொடர்ந்து தலைவர்கள் பலரும் தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.