
சென்னை திருவேற்காட்டில் கோலடி செந்தமிழ் நகரை சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மனைவி ரேணுகா. செவிலியரான இவருக்கும் அண்டைவீட்டில் வசித்துவரும் அமிர்தவள்ளிக்கும் இடையே சண்டை வந்துள்ளது. விசாரிக்கப்பட்டத்தில் ரேணுகா தனது வீட்டின் அருகே கழிவறை கட்டியுள்ளார் அதுதொடர்பாக இருவருக்கும் மோதல் முற்ற இந்த பிரச்சனை திருவேற்காடு காவல் நிலையம் வரை சென்றது.

இருதரப்பையும் விசாரித்த போலீசார் ரேணுகாவின் புகாரை ஏற்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு வந்த ரேணுகா போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கூறி தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீவைத்துக்கொண்டார். உடனே அவரை மீட்ட போலீசார் அவரை தீ காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ரேணுகா இன்று உயிரிழந்துள்ளார்.



இது தொடர்பாக நடந்த விசாரணையில் நான் தற்கொலை செய்து கொள்ள லஞ்சம் வாங்கிக்கொண்டு போலீசார் ஒருதலை பட்சமாக செயல்பட்டதே காரணம் என அவர் மரணப்படுகையில் அம்பத்தூர் துணை ஆணையர் ஈஸ்வரனிடம் உரையாடல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திருவேற்காடு ஆய்வாளர் அலெக்ஸாண்டர் மற்றும் துணை ஆய்வாளர் சரவணன் ஆகியோரை காத்திருப்பு பட்டியலில் வைக்க சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே விஷ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.