அதிகாரம் யாருக்கு? என்பதில் கிரண்பேடி தொடுத்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் கிரண்பேடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்தனர். கடந்த ஜூன் 04-ஆம் தேதி புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதேசமயம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கிரண்பேடி தொடுத்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வருவதை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த 7 ம் தேதி டெல்லி சென்ற நிலையில் கடந்த 9ம் தேதி முதல்வர் நாராயணசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் டெல்லியில் முகாமிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணயில், கிரண்பேடியின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.