காலநிலையைப் பொறுத்தும், உற்பத்தி மற்றும் கையிருப்பைப் பொறுத்தும் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் அவ்வப்போது விஸ்வரூபம் எடுக்கும். அதேவேளையில் மறுபுறம் அதிக விளைச்சல் காரணமாக விலை சரிந்தும் விற்பனையாகும். இந்த நிலையில் கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வேதனை தெரிவித்து வருகின்றனர் தர்மபுரியைச் சேர்ந்த விவசாயிகள்,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் 10 ஏக்கருக்கு மேல் தக்காளி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் தக்காளி விலை கிலோ 60 ரூபாய் என இருந்த நிலையில், தற்பொழுது விலை சரிந்து 10 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், நேரடியாக தங்களிடம் இருந்து தக்காளியைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் அடிமாட்டு விலைக்கே தக்காளியைக் கேட்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.