பெண் காவலரின் மகளை கடத்திய வழக்கில், போலீஸ்காரர் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர், 42 வயது பெண். இவர், குடும்பத்துடன் புதுநகர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது, 19 வயது மகள் கடலுார் தனியார் கல்லுாரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். மகள் காணாமல் போனது குறித்து விசாரித்தபோது தனது மகளை, சிதம்பரம், அண்ணாமலை காவல் நிலைய முதல்நிலை காவலரான கடலுார், வில்வநகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், (வயது 32) கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது.
எனது மகளை கடத்திச் செல்வதற்கு உடந்தையாக கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வரும் வேல்முருகன் தங்கை, அவரது அக்கா காஞ்சனா, அவரது கணவர் அருள் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மகளை மீட்டுத் தருமாறு கடலுார், புதுநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாணவியின் தாய் பெண் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேல்முருகன் மற்றும் தவறு சகோதரிகள் அவரது மாமா உட்பட நான்கு பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெண் போலீஸாரின் மகளை ஆண் போலீஸார் கடத்தி சென்ற சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.