Skip to main content

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம்

Published on 23/09/2017 | Edited on 23/09/2017
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை 
அக்- 4 வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் 

ஐ.என்.எக்ஸ். நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு முதலீடுகளை பெற்று தந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆகாமல் இருந்தார். இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருக்கும் வகையில் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார். ஆனால், சி.பி.ஐ. வழக்கறிஞர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை அக்டோபர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்