கர்நாடகாவுக்கு எதிராக போராடிய வழக்கு: பி.ஆர்.பாண்டியன் உள்பட 17 பேர் விடுவிப்பு
கர்நாடகம் காவிரியில் கழிவு நீர் கலப்பதை எதிர்த்து கடந்த 25.06.2015ல் திருவாருர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன் உள்பட 17 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து 17 பேரை விடுவித்து திருவாரூர் நீதிமன்ற நீதிபதி குமார் இன்று தீர்ப்பளித்தார். விவசாயிகள் 17 பேர் சார்பில் வழக்கறிஞர்கள் தெ.மணிவன்னன் அசோக்குமார் ஆகியோர் ஆஜராகி வந்தனர்.