தென்மேற்கு பருவ மழை கேரளா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடங்கியிருக்கும் நிலையில் கேரளாவில் கடந்த மூன்று நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் கன்னியாகுமாி மாவட்டத்திலும் தொடா் மழை இருந்து வருகிறது. இந்த நிலையில் தென் மேற்கு திசையில் இருந்து 60 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் இதனால் ஆழ்கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் கேரளா, தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க செல்ல வேணடாம் என்று இந்தியா கடல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் கடந்த 13-ம் தேதி குமாி மாவட்டம் நீரோடிதுறையில் இருந்து கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடல் ஆழ்பகுதியில் நாட்டு படகில் தங்கியிருந்து மீன் பிடித்து கொண்டியிருந்த மீனவா்கள் ஸ்டான்லி(41), நிக்கோலஸ்(40), சகாயம்(32), ஜான் போஸ்கோ(46), ராஜீ(50) ஆகியோா் கடல் சீற்றத்தால் 18-ம் தேதி கரை திரும்பி கொண்டியிருந்தாா்கள். இந்த நிலையில் மழையும் சூறாவளி காற்றும் பலமாக வீசியதால் மீனவா்கள் இரவு வரை படகை கடலில் நங்கூரம் போட்டு காற்றின் வேகம் குறையும் வரை காத்துயிருந்தனா்.
இந்த நிலையில் 19-ம் தேதி காலையில் அந்த மீனவா்கள் சென்ற படகு நீண்டகரை கடற்கரையின் தூண்டில் வளையில் மோதி சுக்கு நூறான நிலையில் உடைந்து கிடப்பதை கண்டு சக மீனவா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். அந்த படகில் இருந்த 5 மீனவா்கள் என்ன ஆனாா்கள் என்று தொியவில்லை. மேலும் கேரளா கடலோர பாதுகாப்பு படையினரும் இந்தியா கடலோர ரோந்து படையினரும் மாயமான அந்த மீனவா்களை தேடி வருகின்றனா். மீனவா்கள் மாயமானதை அறிந்து நீரோடி துறை மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளன உள்ளனா்.